செவ்வந்தி கைது, நேபாளம் ஊடகங்களில் முக்கிய செய்தி

செவ்வந்தியும் ஏனைய பிரதான சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டமை தொடர்பாக நேபாளம் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நேபாளம் போஸ்ட் என்ற ஊடகம், இனட்ர்போல் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் சந்தேகநபர்களை கைது செய்தாக செய்தி வெளியிட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் அனுமதி மற்றும் ஒத்துழைப்புடன், நேபாள பொலிஸார் காத்மண்டுவின் புநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்த பிரதான குற்றவாளிகளை கைது செய்ததாகவும், விசாரணையின் பின்னர் சட்ட நடவடிக்கைகளுக்காக இலங்கைப் பொலிஸாரிடம் ஒப்படைத்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் உள்ள பல ஊடகங்கள் இலங்கைக் குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட விவகாரத்தை செய்தியாகவும் செய்தி விமர்சனமாகவும் வெளியிட்டுள்ளமை
குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...