இஷாரா செவ்வந்தி உட்பட 04 சந்தேகநபர்களுக்கு 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவல்

கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட சந்தேகநபர்கள் நால்வரை 72 மணித்தியாலங்கள் தடுப்பு காவலில் வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கணேமுல்ல சஞ்சீவ கொலையின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக்காவல் உத்தரவை பெற கொழும்பு குற்றப்பிரிவு இன்று காலை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இஷாரா செவ்வந்தியுடன் J K பாய், சுரேஷ் மற்றும் தக்ஷி ஆகியோருக்கும் தடுப்பு காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்களின் தலைவர்களில் ஒருவரான கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரரத்ன கொழும்பு புதுக்கடை இலக்கம் 06 நீதிமன்ற அறைக்குள் கடந்த பெப்ரவரி 19ஆம் திகதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
கொலையின் பின்னர் இஷாரா செவ்வந்தி நாட்டிலிருந்து தப்பிச்சென்றிருந்தார்.
நேபாள பாதுகாப்பு பிரிவினருடனான விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 06 சந்தேகநபர்கள் நேற்று முன் தினம்(15) நாட்டிற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பகிரவும்...