கனடா, அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஊடுருவிய ஹமாஸ் ஆதரவாளர்கள்

கனடா மற்றும் அமெரிக்கா விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஹேக் செய்த மர்ம நபர்கள், ஹமாஸூக்கு ஆதரவாகவும், அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் பரபரப்பு நிலவியது.
இஸ்ரேல், ஹமாஸ் இடையே 2 ஆண்டுகளாக நீடித்த போர் , கடந்த 10ம் திகதி முதல் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது.
இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததில் மெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பங்கு அளப்பரியது.
இந்தப் போர் நிறுத்தத்திற்கு உடன்பட மறுத்த ஹமாஸை, அமெரிக்க ஜனாதிபதி கடுமையாக எச்சரித்தார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் பென்சில்வேனியாவின் ஹாரிஸ்பர்க் சர்வதேச விமான நிலையம், கனடாவின் கெலோனா, விக்டோரியா மற்றும் வின்ட்சர் சர்வதேச விமான நிலையங்களின் பொது அறிவிப்பு பலகைகளை ஹமாஸ் ஆதரவாளர்கள் ஊடுருவியுள்ளனர்.(ஹேக்) செய்துள்ளனர்.
அதில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு எதிராகவும் செய்திகளை வெளியிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
பகிரவும்...