Main Menu

இலங்கையின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலம் காலமானார்

முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் ஜயனந்த வர்ணவீர தமது 64 வது வயதில் இன்று (16) காலமானார்.

1986 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான ஜயனந்த வர்ணவீர, 8 ஆண்டுகளுக்கும் மேலாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஒரு சிறந்த பந்து வீச்சாளரான அவர், 1994 இல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றபோது 32 டெஸ்ட் விக்கெட்டுகளையும் 6 ஒருநாள் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார்.

பகிரவும்...
0Shares