இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை – அமெரிக்கா

அமெரிக்க வெளிவிவகாரத்துறை அண்மையில் வெளியிட்ட இலங்கைக்கான பயண ஆலோசனையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை அமெரிக்க தூதர் ஜூலி சுங் உறுதிபடுத்தியுள்ளார்.
அமெரிக்க குடிமக்கள் சர்வதேச பயணம் குறித்து தகவலறிந்த முடிவுகளை எடுக்க உதவும் வகையில், அமெரிக்க வெளிவிகாரத்துறை தொடர்ந்து பயண ஆலோசனை புதுப்பிப்புகளை வெளியிடுவதாகவும் இலங்கைக்கான தூதுவர் தனது சுட்டிக்காட்டினார்.
இது குறித்த எக்ஸ் பதிவில் அவர்,
2025 ஒக்டோபர் 9 ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட்ட பயண ஆலோசனை நிலை 2 இல் உள்ளது, ஆலோசனை மட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை – என்றார்.
அமெரிக்க வெளிவிவகாரத்துறை இலங்கைக்கான பயண ஆலோசனையை திருத்தியமைத்துள்ளதாக வெளியான பல அண்மைய தகவல்களை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இலங்கையின் போரினால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதியில் உள்ள நிலங்கள் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பொதுமக்களுக்கு விடுவிக்கப்பட்டதால், கண்ணிவெடி அபாயங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் போன்ற காரணத்தினால் தீவு நாட்டுக்கான பயண எச்சரிக்கை அமெரிக்க வெளிவிவகாரத்துறை கடந்த வாரம் புதுப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.