Main Menu

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு : கல்வி ஒத்துழைப்புக்கு உறுதி

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று வியாழக்கிழமை (ஒக். 16) காலை டெல்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்தார்.

இந்தச் சந்திப்புக் குறித்து தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், “இன்று காலை இலங்கை பிரதமர் ஹரிணி அமரசூரியவை டெல்லியில் சந்தித்ததில் மகிழ்ச்சி. இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவு மற்றும் கல்வி மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

ஹரிணி அமரசூரிய பிரதமராக பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்கு மேற்கொள்ளும் முதல் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும். கல்வி அமைச்சராகவும் இருக்கும் அவர், தனது இந்திய விஜயத்தின் போது, இந்திய தொழில்நுட்பக் கழகம் (IIT) டெல்லி, மற்றும் நிதி ஆயோக் (NITI Aayog) ஆகியவற்றிற்கு விஜயம் செய்து, கல்வி, புத்தாக்கம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதுடன் கல்வி மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து கலந்தாலோசிப்பார் என  எதிர்பார்க்கப்படுகிறது.

பகிரவும்...
0Shares