தெற்கு கடற்பரப்பில் 670 கிலோ ஐஸ் உட்பட பாரியளவிலான போதைப்பொருள் மீட்பு

தெற்கு கடற்பரப்பில் கடலில் மிதந்து கொண்டிருந்த 51 பொதிகளில் 839 கிலோ கிராம் போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தங்காலை மீன்பிடித் துறைமுகத்துக்கு நேற்று (14) மாலை கொண்டுவரப்பட்ட இந்தப் போதைப்பொருட்கள் தொடர்பில் கடற்படையினர் இன்று தகவல் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, இந்தப் பொதிகளில் மொத்தம் 670 கிலோ ஐஸ் (கிரிஸ்டல் மெத்தம்பேட்டமைன்), 156 கிலோ ஹெராயின் மற்றும் 12 கிலோ ஹாஷிஸ் ஆகியவை இருந்ததாக இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இந்தப் போதைப்பொருள் தொகை, ‘உனகுருவே சாந்த’ என்று அழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று கப்பல்கள் மூலம் நாட்டிற்குள் போதைப்பொருள் தொகை கடத்த முயற்சிப்பது குறித்து கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) பணிப்பாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ஹேமல் பிரசாந்தவுக்கு தகவல் கிடைத்தது.
அந்த தகவலின்படி, கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையின் கீழ், தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடல் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொண்டன் விளைவாக இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...