முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று(10) மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேசபந்து தென்னகோன் மற்றும் ஏனைய சந்தேக நபர்கள் விசாரணைக்காக இன்று (10) நீதிமன்றத்தில் முன்நிலையாகியிருந்தனர்.
கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் உள்ள விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில்
குறித்த வழக்கு இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.