பாதாள உலக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும் – ஜனாதிபதி
வீழ்ச்சியடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதோடு, அனைத்து வகையிலும் சரிவடைந்துள்ள சமூகத்தை சீர்படுத்தும் பொறுப்பையும் அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் துப்பாக்கி வன்முறையால் சமூகத்தை பாரிய அழிவுக்கு இட்டுச் சென்ற பாதாள ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை ஒருபோதும் மாற்றியமைக்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.
நாட்டிலிருந்து போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய செயற்பாட்டை ஆரம்பிப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை எமக்கு மீண்டும் கட்டியெழுப்ப முடியும். ஆனால் ஒரு சமூகம் பெரும் அழிவை சந்திக்கும்போது, அந்த சமூகத்தை மீண்டும் கட்டியெழுப்புவது கடினம்.
பகிரவும்...
