இலங்கையில் முதலீடு செய்ய இந்தோனேசியா ஆர்வம்

இலங்கையில் சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு இந்தோனேசியா அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இலங்கை அரசுடன் இணைந்து வலுவான செயல் திட்டங்களை முன்னெடுத்து, எதிர்காலத்தில் சிறந்த முதலீட்டு பங்குதாரராக விளங்கும் விருப்பத்தையும் இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இந்த விடயங்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று மேல் மாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. இதில் இலங்கைக்கான இந்தோனேசிய தூதுவர் மற்றும் மேல் மாகாண ஆளுநர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...