ஐ.ம.சவில் இணைந்த உறுப்பினர்களின் மீதான தடையை நீக்க ஐ.தே.க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த தங்களது கட்சி உறுப்பினர்களின் மீது விதிக்கப்பபட்ட அனைத்து கட்சி தடைகளையும் நீக்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததால் தங்களது கட்சி உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டு, அவர்களுக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதால், கட்சியில் இணைந்து பணியாற்ற அவர்களுக்கு கட்சியினால் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று (16) மாலை கூடிய ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு குறித்த தடையை நீக்குவதற்கும் உறுப்புரிமை நீக்கத்தை ரத்து செய்யவும் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதில் ஏற்படக்கூடிய சட்டப் பின்னணியை ஆராய முன்னாள் சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான திலக் மாரப்பன தலைமையில் ஒரு குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு செயற்குழு எடுத்த இந்த நடவடிக்கையின் காரணமாக, அவர்கள் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து பணியாற்றுவதற்கு இருந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில், பிடகோட்டே சிறிகொத்தாவில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சி தலைமையகத்தில் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பகிரவும்...