நீதிமன்றத்தில் சரணடைந்தார் சம்பத் மனம்பேரி

மித்தெனியவில் ஐஸ் ரக போதைப்பொருள் உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த சம்பத் மனம்பேரி, இன்று (17) வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.
மித்தெனியவில் இரண்டு கொள்கலன்கள் கண்டுபிடிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, தனது கட்சிக்காரர் சம்பந்தப்பட்ட நீதவான் நீதிமன்றத்தில் சரணடையத் தயாராக இருப்பதாக, நேற்று முன்தினம் (15) மனம்பேரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்குத் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, மனம்பேரி சரணடைந்த பின்னர் அவரது பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டது.
சம்பத் மனம்பேரியின் சட்டக் குழு தாக்கல் செய்த ரிட் மனுவை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பகிரவும்...