Main Menu

இன்று முதல் கடுமையாக அமுல் படுத்தப்படும் போக்குவரத்து சட்டங்கள்

போக்குவரத்துச் சட்டங்கள் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, வாகனங்களை சோதனை செய்வதற்காக நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிடப்பட்ட அறிக்கையில்,

போக்குவரத்து விதிமுறைகளை மீறி பொருத்தப்பட்ட அதிகப்படியான சத்தம் கொண்ட ஒலி அமைப்புகள் மற்றும் பல வண்ண, ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்றார்.

கடந்த வியாழக்கிழமை (04) இரவு எல்லா-வெல்லவாய வீதியின் 24 ஆவது மைல்கல் அருகே ஒரு சொகுசு ஜீப்புடன் மோதுண்ட நிலையில், பேருந்து ஒன்று வீதியின் ஓர பாதுகாப்புத் தடையை உடைத்து சுமார் 1,000 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர், மேலும் 18 பேர் காயமடைந்தனர்.

இந்த துயர விபத்தைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares