Main Menu

பாகிஸ்தானில் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று தாக்குதல்களில் 22 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் செவ்வாய்க்கிழமை (நேற்று) வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட மூன்று பயங்கரவாதத் தாக்குதல்களில்  சுமார் 22 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதில், தென்மேற்கு மாகாணமான பலுசிஸ்தானில் ஒரு அரசியல் பேரணியை குறிவைத்து தற்கொலை குண்டுதாரி நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் சுமார் 40 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஈரான் எல்லைக்கு அருகிலுள்ள பலுசிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நடந்த மற்றொரு தாக்குதலில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அவர்களின் தளத்தின் மீது நடந்த தற்கொலைத் தாக்குதலுக்குப் பின்னர் ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares