Main Menu

உக்ரைன் மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம்! -புடின்

உக்ரேனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே இடம்பெற்று வரும்  மோதலுக்கு மேற்கத்திய நாடுகள் தான் காரணம் என ரஷ்ய ஜனாதிபதி  விலாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தியான்ஜின் நகரில் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில்  கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணைக்க மேற்கு நாடுகள் தொடர்ந்து முயற்சிப்பது உக்ரைன் மோதலுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

நாங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தியபடி, இது ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாக அமைகிறது. 2014ம் ஆண்டு உக்ரைனில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு, மேற்கத்திய நாடுகளில் தூண்டுதலின் பேரில் நடந்தது”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares