கைதான குற்றவியல் கும்பல் உறுப்பினர்களை நாளை நட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்ட கெஹல்பத்தர பத்மே உள்ளிட்ட இலங்கையின் முக்கிய குற்றக் கும்பலைச் சேர்ந்த 05 பேர் நாளை நாட்டுக்கு அழைத்து வரப்படவுள்ளனர்.
இலங்கையிலிருந்து ஒரு சிறப்பு பொலிஸ் குழு இன்று (30) அவர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்காக இந்தோனேஷியா புறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் உள்ள சக்திவாய்ந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களின் தலைவர்களாகக் கருதப்படும் இவர்கள், கடந்த ஆகஸ்ட் 28 அன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் இலங்கை பொலிஸார் மற்றும் ஜகார்த்தா பொலிஸாரின் ஒன்றிணைந்த சிறப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட பாதாள உலக நபர்களில் கெஹெல்பத்தர பத்மே, கமாண்டோ சாலிந்தா, பாணந்துறை நிலங்கா, தெம்பிலி லஹிரு மற்றும் பேக்கோ சமன் ஆகியோர் அடங்குவர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவர்களுடன் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் குழந்தை நேற்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்டனர்.
இவர்கள் நாட்டை வந்தடைந்த போது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (CID) அவர்களை கைது செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...