அகதிகளின் வருகையை கட்டுப்படுத்த பிரித்தானியா நடவடிக்கை

பிரித்தானிய அரசு அகதிகளின் வருகை மற்றும் குடியேற்றம் தொடர்பில் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டு செயற்பட்டு வருகின்றது. சமீபத்தில் வெளியான தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு 1,11,084 பேர் பிரித்தானியாவில் அகதிகளாக பதிவு செய்யப்பட்டனர்.
இவ்வாறு பிரித்தானியாவுக்கு வருகை தரும் அகதிகளில் பெரும்பாலும் ஆப்கானிஸ்தான் மற்றும் எரிட்ரியா போன்ற உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பின்புலத்தைக் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவர்களில் 30 வயதுக்குட்பட்ட ஆண்கள், குழந்தைகள் மற்றும் சில குடும்பங்கள் அதிகம் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு இவர்களுக்கு அத்தியாவசிய வசதிகள், உணவு, மருத்துவ சேவைகள் மற்றும் தற்காலிக வாழ்விடங்களை வழங்கி வருகின்றது.
அதேவேளை, சில அகதிகளை நாட்டிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளும் பிரித்தானிய அரசு பரிசீலனை செய்கிறது. இது குறித்து அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில் ” நாட்டில் அகதிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தி, குடியுரிமை கொள்கைகளை வலுப்படுத்துவது தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
இது சமூகத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதேவேளை மனித உரிமை அமைப்புகளும் குறித்த விடயம் தொடர்பில் கவலை தெரிவித்துள்ளனர். அகதிகளின் பாதுகாப்பு மற்றும் நலனை உறுதி செய்வது அவசியம் எனவும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பகிரவும்...