Main Menu

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன மீது ஒழுக்காற்று நடவடிக்கை?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை தொடர்பாக, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்த நிலையில் அவர்
மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து  பிரதி சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி மேலும் கருத்துத் தெரிவிக்கையில்  “கொழும்பு தேசிய மருத்துவமனையின் பிரதி பணிப்பாளர், மருத்துவர் ருக்ஷான் பெல்லனவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.

நோயாளிகளின் உடல் நிலைமை மற்றும் அவற்றுடன் தொடர்புடைய தகவல்களை பொதுவாக ஊடகங்களுக்கு வழங்குவதில்லை. அவ்வாறு செயற்படுவதில் ஒழுக்கம் மற்றும் சட்ட ரீதியான சிக்கல்கள் காணப்படுகின்றது.

இந்தநிலையில், ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்ட சம்பவத்துடன், நோயாளியின் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதனை ஊடகங்கள் அவ்வாறே வெளியிட்டுள்ளன. அதனை ஏற்றுக் கொள்ள முடியாது ஆகவே, அது ஒழுக்க விதிமுறைகளை மீறும் செயற்பாடு இந்நிலையில் நாம் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கவுள்ளோம். ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.

வைத்தியருக்கு அத்தகைய அறிவிப்புகளை வெளியிட உரிமை இல்லை. ரணில் வேறு மருத்துவ பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஒரு நோயாளி எங்களிடம் வரும்போது, சுகாதார அமைச்சாக எங்களால் முடிந்ததைச் செய்கிறோம்.

ஆனால் தேசிய மருத்துவமனையுடன் சம்பந்தப்பட்ட வைத்தியர் அவருக்கு சம்பந்தம் இல்லாத வேலையைச் செய்துள்ளார். ஒரு நோயாளியின் பதவி எதுவாக இருந்தாலும், ஊடகங்களுக்குத் தகவல் அளிக்க வைத்தியருக்கு எந்த உரிமையும் இல்லை” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பகிரவும்...
0Shares