தேசபந்து தென்னகோனுக்கு பிணை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், முன்னாள் பொலிஸ்மா அதிபர் மீது வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
2022 மே 9 அன்று கொழும்பு, காலி முகத்திடலில் ‘அரகலயா’ போராட்ட இயக்கத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் பொலிஸ்மா அதிபர் ஆகஸ்ட் 20 அன்று அவரது இல்லத்தில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
பகிரவும்...