முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிணையில் விடுதலை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை கைது செய்வதற்கான பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் , அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அவர் ஆஜரானதுடன்
10 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சரீரப் பிணையில் அவர் விடுவிக்கப்பட்டார்.
டயானா கமகே மீது தாக்கல் செய்யப்பட்ட ஏழு வழக்குகள் முன்னர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
இதேவேளை, செல்லுபடியாகும் விசா இல்லாமல் இலங்கையில் தங்கியிருந்த குற்றச்சாட்டும் அவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அடங்கும்.
பகிரவும்...