Main Menu

டயானா கமகேவுக்கு பிடியாணை

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால், அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் அவரைக் கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு இன்று வியாழக்கிழமை (21) கொழும்பு பிரதான நீதவான் முன்பு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது பிரதிவாதி நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பிரதிவாதியான டயானா கமகேவின் பிணையாளர்களுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...