ஜனாதிபதியை சந்தித்தார் புதிய பொலிஸ் மா அதிபர்
புதிய பொலிஸ்மா அதிபர், சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய, நேற்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்தார்.
புதிய பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு ஜனாதிபதிக்கு அவர் நினைவுப் பரிசொன்றையும் வழங்கினார்.
சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இலங்கை பொலிஸின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை பொலிஸ் சேவையில் கான்ஸ்டபிள் (காவல் துறை அதிகாரி), சப்-இன்ஸ்பெக்டர் (உதவி ஆய்வாளர்) மற்றும் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து பொலிஸ்மா அதிபர் பதவிக்கு தெரிவான முதலாவது பொலிஸ்மா அதிபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...