Main Menu

கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம் : ஐவர் காயம்

கொழும்பு, பொரள்ளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொரள்ளை சகஸ்ரபுர பகுதியிலேயே குறித்த துப்பாக்கிப் பிரயோகம் இன்று வியாழக்கிழமை (7) இரவு இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ரி.56 ரக துப்பாக்கியில் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares