Main Menu

தமிழர் விடயத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைப்பாடு

தமிழர் விடயத்தில் யார் ஆட்சிக்கு வந்தாலும் ஒரே நிலைப்பாட்டையே வகிக்கின்றனர் என வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான நீதிகோரும் சங்கத்தின் ஏற்பாட்டுக் குழு குற்றச்சாட்டியுள்ளது.

இது தொடர்பாக, யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், குறித்த அமைப்பின் செயலாளரும் வவுனியா மாவட்டத் தலைவருமான சிவானந்தன் ஜெனிதா கருத்துத் தெரிவிக்கையில்,”2024 ஓகஸ்ட் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் நினைவு நாளை முன்னிட்டு, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பில் மாபெரும் நீதிக்கான பேரணி முன்னெடுக்கப்படும்” என அறிவித்தார்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை, செம்மணி மனித புதைகுழிகள், சித்திரவதை முகாம்கள் ஆகியவை இனவழிப்பு மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன என்றும், இவை அனைத்தும் சர்வதேச விசாரணையின் கீழ் விரைந்து விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், 2025 புரட்டாசி 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்வில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தவும் அனைத்து மனித உரிமை மேம்பாட்டு நாடுகளிடம் கோரிக்கை விடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

பேரணி விபரம் :

  • மட்டக்களப்பில் – கல்லடி பாலம் முதல் காந்தி பூங்கா வரை

  • யாழ்ப்பாணத்தில் – சங்கிலியன் நினைவிடத்திலிருந்து செம்மணி வரை

இந்த பேரணியில் மதத் தலைவர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பல்கலைக்கழகத்தினர், மனித உரிமை ஆர்வலர்கள், கிராமிய அமைப்புகள் மற்றும் பொது மக்கள் அனைவரையும் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares