பாதாள உலகக் குழுக்களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளதால் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளன – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்
பாதாள உலகக் குழுக்களால் தேசிய பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை. பாதாள உலக குழுக்களை இல்லாதொழிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்தினால் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பாதாள உலகக்குழு களுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளது. இதன் காரணமாகவே துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகம் இடம் பெறுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு பெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
தேசிய பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை. தேசிய பாதுகாப்பு எனும் விடயத்தில் பாதாள உலக குழுக்கள் நேரடியாக தொடர்பு படுவதில்லை. திட்டமிட்ட குற்றச் செயல்கள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் கட்டுப்படுத்தப்படுகிறது.
பொலிஸாருக்கு தேவையான பாதுகாப்பை ஒரு வரையறைக்கு உட்பட்டு அதனை பெற்றுக்கொடுக்கிறோம்.
தற்போது பாதாள உலகக்குழுக்கள் அதிருப்தி அடைந்துள்ளன.பாதாள உலக குழுக்களை இல்லாதெழிக்கும் தற்போதைய அரசாங்கத்தினால் வேலைத்திட்டத்தினால் அவர்கள் அதிருப்தி அடைந்திருக்க வேண்டும்.பாதாள உலகக்குழுகளுக்கு அரசியல் ரீதியாக பாதுகாப்பு பெற முடியாது உள்ளது. பாதாள உலக்குழுக்களை செயற்படுத்தும் தரப்பினர் தற்போது கைது செய்யப்படுகிறார்கள்.
இதனை கட்டுப்படுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினால் புதிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. அதனை முன்னெடுப்பதற்கான சட்டரீதியான ஒத்தழைப்பையும் இராணுவ வசதிகளையும் நாம் வழங்கி வருகிறோம் என்றார்.
கேள்வி- அரசியல் பாதுகாப்பு கிடைக்கவில்லை என்பதாலா தினமும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகின்றன?
பதில்- ஆம்.இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். பாதாள உலகக்குழுக்கள் அதிருப்தி அடைந்துள்ளன.
இது அவர்களுக்கு ஒரு தடையாக இருக்கலாம். இதன் காரணமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றார்.
பகிரவும்...