இராணுவத் தளபதியின் சேவைக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிப்பு

இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் சேவைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் மேலும் ஒரு வருட கால சேவை நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் 25ஆவது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ கடந்த வருடம் டிசம்பர் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அனுபவமிக்க இராணுவ அதிகாரியான, லெப்டினன் ஜெனரல் ரொட்ரிகோ முன்னர் இலங்கை இராணுவத்தின் பிரதிப் பிரதானியாக பணியாற்றியுள்ளதுடன் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் தளபதியாகவும் செயற்பட்டுள்ளார்.
பகிரவும்...