பொரளையில் கோர விபத்து; ஒருவர் உயிரிழப்பு, பலர் காயம்

பொரளை, கனத்தை சந்தி பகுதியில் இன்று (28) காலை ஏற்பட்ட பயங்கர வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த விபத்தில் ஐந்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரேக்குகள் சரியாக வேலை செய்யாத கிரேன் லொறி ஒன்று பல வாகனங்கள் மீது மோதியதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பகிரவும்...