முதல் முறையாக இணையவழி ஏலத்தில் ரூ.6 கோடிக்கு விற்பனையான காந்தியின் ஓவியம்
லண்டன், போன்ஹாம்ஸில் ( Bonhams) நடந்த இணையவழி ஏலத்தில், காந்தி ஓவியம் 6 கோடிக்கு ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
பிரித்தானியக் கலைஞர், கிளேர் லெய்டனால் (Clare Leighton) வரையப்பட்ட காந்தி ஓவியம், நிர்ணயிக்கப்பட்ட விலையைக் காட்டிலும் மூன்று மடங்கிற்கு விற்பனை செய்யப்பட்டது.
இணையவழி ஏல விற்பனையில் இது முதலிடத்தைப் பிடித்தது.
மேலும், ஓவியம் ஒன்று இணையவழி ஏலத்தில் விற்கப்பட்டது, இதுவே முதல் முறை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 1931 இல் மாநாடு ஒன்றில் கலந்து கொள்ளக் காந்தி, லண்டனுக்குச் சென்ற போது அவரை கிளேர் லெய்டன் சந்தித்துள்ளார்.
இதன்போது தம்மை ஓவியமாக தீட்டுவதற்கு காந்தி இணங்கியுள்ளார்.
இதுவே, தன் வாழ்நாளில் ஒரு ஓவியருக்கு, ஓவியம் வரைவதற்கு காந்தி வழங்கிய சந்தர்ப்பம் எனக் கருதப்படுகின்றது.
