திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதன் அடித்தளமே கல்வி சீர்திருத்தம்
21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதற்கான, அடிப்படை அடித்தளத்தை அமைப்பது புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
புதிய கல்வி சீர்திருத்தத்தின் ஊடாக உருவாக்கப்படும் பிரஜை, நாட்டின் நிலையான தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானச் செயன்முறைக்கு, பங்களிப்பாளராக செயற்படுவார் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் நோக்கங்கள், இலக்குகள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் தொடர்பில் இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பிரதமரால் விளக்கமளிக்கப்பட்டது.
