விஜய்யுடன் அரசியல் செய்வது கடினம்- சீமான்
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜய்யை பொறுத்தவரையில் அவர் பெரியாரைக் கொள்கை தலைவராக ஏற்றுள்ளதால், அவருடன் அரசியல் செய்ய முடியாது என சீமான் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனக்கு யாரும் போட்டி கிடையாது எனவும், மக்கள் எங்கள் பக்கம் உள்ளனர் எனவும் சீமான் தெரிவித்துள்ளார்
