Main Menu

ஆப்கானிஸ்தான் மீது பாய்ந்த சர்வதேச சட்டம்

நெதர்லாந்தை தளமாகக் கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், தலிபான் உயர் தலைவர் ஹிபதுல்லா அகுன்சாடா மற்றும் ஆப்கானிஸ்தானின் பிரதம நீதியரசர் அப்துல் ஹக்கீம் ஹக்கானி ஆகியோருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பித்துள்ளது.

2021 ஆம் ஆண்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததிலிருந்து பெண்கள், சிறுமிகள் மற்றும் மாற்றுப் பாலின சமூகத்தினரைத் துன்புறுத்துவதன் மூலம் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அவர்கள்மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

தலிபான் தலைவர்கள் சிறுமிகள் கல்வி கற்பதைத் தடை செய்துள்ளனர், பெண்களின் சுதந்திரங்களைக் கட்டுப்படுத்தியுள்ளனர், மேலும் பெண்களின் உரிமைகளையோ மாற்றுப் பாலின சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருதப்படும் மக்களையோ ஆதரிப்பவர்களாக செயற்படவில்லை என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் இந்த தீர்மானம் இஸ்லாம் மற்றும் ஷரிஆ சட்டத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாகக் கூறி, அதனை தலிபான்கள் நிராகரித்துள்ளனர்.
பகிரவும்...