மேர்வின் சில்வா மற்றும் மூவருக்கு பிணை

கிரிபத்கொடையில் உள்ள அரச நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில், விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் மூவருக்கு பிணையில் செல்ல கம்பஹா மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.