கந்தானை துப்பாக்கிச் சூடு – மறைந்த அமைச்சரின் பிரத்தியேக செயலாளருக்கு காயம்

கந்தானையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த இருவரில், மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் பிரத்தியேக செயலாளராக பணியாற்றிய சமீரா மனஹாரவும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானையில் இன்று (3) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்தானை பொதுச் சந்தைக்கு அருகில் காரில் இருந்த இருவரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...