இந்திய அகதிமுகாமில் தஞ்சமடைந்திருந்த நிலையில் நாடு திரும்பிய ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் – சுமந்திரன்
இந்தியாவில் அகதிமுகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த நிலையில் பலாலியை வந்தடைந்த ஒருவரை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கைதுசெய்துள்ளனர் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் எம் ஏ சுமந்திரன் தனது சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார்
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.
இந்தியாவில் அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்து நேற்று பலாலியை வந்தடைந்த 75 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டு இன்று குற்றப் புலனாய்வுத் துறையினரால் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார்.
நாடு திரும்புவதற்குத் தேவையான சகல ஆவணங்களும் அவரிடம் இருந்தபோதும், சர்வதேச சட்டப்படி அவர் ஒரு “அகதி” என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னரும் அவரை பிணையில் விடுவிக்க எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தினால் ஜூன் 5ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். நாடு திரும்புவதற்கு தாயாராக இருக்கும் 10 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பயந்து வராமல் பண்ணுவதற்கான ஏற்பாடா இது?
பகிரவும்...