Main Menu

26 ஆம் திகதிமுதல் போர்வீரர் நலப் பிரிவு ஆரம்பம்

எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் நாட்டின் ஒவ்வொரு இராணுவ முகாமிலும் போர்வீரர் நலப் பிரிவு ஆரம்பிக்கப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரெட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த போர்வீரர் நலப் பிரிவு நாளை மறுநாள் (26) முதல் ஒவ்வொரு இராணுவ முகாமின் கட்டளை அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் செயல்படும்.

இராணுவ ஓய்வுபெற்ற, அங்கவீனமுற்ற மற்றும் உயிரிழந்த போர்வீரர்களின் குடும்பங்களுக்கான நலன்புரி நடவடிக்கைகளை எளிதாக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பகிரவும்...
0Shares