இலங்கையின் தேயிலை ஏற்றுமதி அதிகரிப்பு
2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இலங்கையின் தேயிலை ஏற்றுமதி 19.37 மில்லியன் கிலோகிராமாக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
2024 ஆண்டின் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது இந்த முறை தேயிலை ஏற்றுமதி 0.61 மில்லியன் கிலோகிராமினால் அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 18.76 மில்லியன் கிலோகிராம் தேயிலை ஏற்றுமதி பதிவாகியுள்ளது.
இதேவேளை, இலங்கை தேயிலையை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் ஈராக் முன்னிலை வகிக்கின்றது.
இதற்கமைய 2025ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் ஈராக் 3.02 மில்லியன் கிலோகிராம் தேயிலையை இறக்குமதி செய்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
