நாமலின் கிறிஸ் கொடுக்கல் – வாங்கல் வழக்கிலிருந்து நீதிபதிகள் இருவர் விலகல்
கிறிஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கிலிருந்து விலகுவதாக இரண்டு நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மஞ்சுள திலகரத்ன குறித்த வழக்கிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
இன்று முற்பகல் அவர் தமது அறிவிப்பை வெளியிட்டதாக நீதிமன்றுக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இதனையடுத்து குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்க முன்னிலையில் அழைக்கப்பட்டது.
எனினும் தாமும் இந்த வழக்கிலிருந்து விலகுவதாக நீதிபதி சுஜீவ நிஸ்ஸங்கவும் அறிவித்துள்ளார்.
இதற்கமைய, பொருத்தமான நீதிபதி ஒருவரைப் பெயரிடுவதற்காகக் குறித்த வழக்கு எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதி கொழும்பு பிரதான மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்டபெந்திகே முன்னிலையில் அழைக்கப்படவுள்ளதாக நீதிமன்றுக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
பகிரவும்...