Main Menu

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகள் தாய்நாட்டில் வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக திருகோண-மலையில் கலந்துரையாடல்

உள்நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக நாட்டை விட்டு இடம்பெயர்ந்து இந்தியாவில் வசிக்கின்ற அகதிகள் தமது தாய்நாட்டுக்கு திரும்பி நிலையாக வாழ்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பான கலந்துரையாடல் புதன்கிழமை (26) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இலங்கை எதிலியர் மறுவாழ்வு கழகத்தின் (Oferr Ceylon) ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டபிள்யூ.ஜி.எம். ஹேமந்தகுமாரவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இதன்போது Oferr Ceylon தலைவி சின்னதம்பி சூரியகுமாரி, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு திரும்புபவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினைகளான வசிப்பதற்கான காணி, அடிப்படை ஆவணங்கள், வாழ்வாதாரம், நாடு திரும்பிய பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு, நிரந்தர வீட்டுத்திட்டம், சுகாதார வசதிகள், சமூக ஒருங்கிணைவு போன்றவை மக்களுக்கு தடையின்றி கிடைப்பதற்கு உரிய தீர்வுகளை இக்கலந்துரையாடலின் மூலம் பெற்றுக்கொடுப்பதே பிரதான நோக்கமாக காணப்படுவதாக தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், திணைக்கள தலைவர்கள் மற்றும் Oferr Ceylon நிறுவனத்தின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

பகிரவும்...
0Shares