Main Menu

வவுனியாவில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வேட்பு மனுவைத் தாக்கல் செய்தது

எதிர்வரும் உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வவுனியாவில் புதன்கிழமை (19)  தாக்கல் செய்தது.

வவுனியா மாநகரசபை மற்றும் வவுனியா வடக்கு பிரதேச சபை,வெண்கலசெட்டிகுளம் பிரதேச சபை  ஆகியவற்றில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவையே தமிழ் அரசுக் கட்சி  தாக்கல் செய்தது.

வேட்பு மனுவினை பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம், மற்றும்  வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் முக்கியஸ்தர்கள் சகிதம் இன்று மாலை கையளித்திருந்தனர்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள நான்கு உள்ளூராட்சி சபைகளிலும் தமிழ் அரசுக் கட்சி  இம்முறை தனித்துப் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares