பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையிலுள்ள 3.5 மில்லியன் இளம் தலைமுறையினரில் 71 வீதமானோரே பாடசாலைக்கு செல்வதாகவும், 29 வீத பாடசாலை மாணவர்கள், தங்களுடைய கல்வி நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளதாகவும், 2024 ஆம் ஆண்டுக்கான உலகளாவிய பாடசாலைகளை அடிப்படையாக கொண்ட மாணவர் சுகாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் 40 அரச பாடசாலைகளில் தரம் 8 முதல் 12 வரையிலான 3,843 மாணவர்களை இணைத்து இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆய்வுக்குட்படுத்தப்பட்ட மாணவர்களில் 17.7 வீதமானோர் ஆரோக்கியமற்ற பானங்களை அருந்துவதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
28 வீத மாணவர்கள் நாளாந்தம் சீனி கலந்த பானங்களை அருந்துவதுடன் 28.5 வீத மாணவர்கள் உப்பு கலந்த சிற்றுண்டிகளை பெற்றுக் கொள்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது. அத்தோடு, 29.3 வீதமானோர் அதிக எண்ணெய் கலந்த உணவை பெற்றுக் கொள்வதுடன் 40.9 வீத மாணவர்கள் நாளாந்தம் அதிக சீனி கலந்த உணவுகளை உட்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், ஆண், பெண் மற்றும் வயதுக்கமைய ஒரு சிகரெட் அல்லது இரண்டு சிகரெட்டுக்களை பயன்படுத்திய அல்லது பயன்படுத்த முயற்சித்த மாணவர்களின் எண்ணிக்கை 12.8 வீதமாக பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சுகாதார ஆய்வறிக்கையானது சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி தலைமையில் சர்வதேச பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...