சிகிச்சையின் பின் வீடு திரும்பினார் ஏ.ஆர. ரஹ்மான்

சென்னை தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிகிச்சையின் பின் வீடு திரும்பியுள்ளார்.
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார், இது அவரின் ரசிகர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியிருந்தது.
தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பலரும் ஏ.ஆர்.ரஹ்மான் விரைவில் குணமடைய வேண்டும் என சமூக ஊடகங்களில் எழுதியிருந்தனர்.
குறிப்பாக தமிழக முதலமைச்சர் எம்.கே.ஸ்டாலின்,
“இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியைக் கேட்டவுடன், நான் மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அவரது உடல்நலம் குறித்து விசாரித்தேன்! அவர் அவர் நலமாக இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறினர்!.” தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சையின் பின்னர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பகிரவும்...