Main Menu

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிலையில் வீடியோ மூலம் ஆஜரானார் பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி

பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டே சர்வதேச நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜரான முதல் ஆசிய தலைவராகியுள்ளார்.

பிலிப்பைன்சின் 79 வயது முன்னாள் ஜனாதிபதி அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து வீடியோ மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளில் இணைந்துகொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

ரொட்ரிகோ டுட்டர்டே நீண்டதூரம் பயணம் செய்ததை கருத்தில் கொண்டு நீதிபதி இதற்கான அனுமதியை வழங்கியிருந்தார்.

போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தின்போது இவர் 30,000க்கும் அதிகமான பொதுமக்களை கொலை செய்தார் என சர்வதேச நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது.

2016 முதல் 2022 முதல் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியாக பதவிவகித்த செவ்வாய்கிழமை ஐசிசியின் பிடியாணையின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.

இதன் பின்னர் விமானம்மூலம்நெதர்லாந்திற்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

நீதிமன்றத்தின் நடவடிக்கைகளில் அவர் வீடியோ மூலம் கலந்துகொண்டவேளை அவர் இழைத்ததாக தெரிவிக்கப்படும் குற்றங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அவருக்கு தன்னை நியாயப்படுத்துவதற்கான உரிமைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.

பலவீனமானவராக காணப்பட்ட பிலிப்பைன்சின் முன்னாள் ஜனாதிபதி தனது பெயர் விபரங்களை உறுதி செய்தார்.

இதேவேளை தனது கட்சிக்காரர் பிலிப்பைன்சிலிருந்து கடத்தப்பட்டுள்ளார் என பிலிப்பைன்;ஸ் ஜனாதிபதியின் சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பகிரவும்...
0Shares