இந்தியாவை சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை
இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் அமெரிக்காவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த பிரவீன் என்ற மாணவன் அமெரிக்கா விஸ்கான்சின் மாகாணத்தின் மில்வாக்கி நகரில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்விகற்று வந்துள்ளார் .
அத்தோடு, மில்வாக்கியில் உள்ள ஒரு விற்பனை நிலையத்தில் பகுதி நேரமாக பணியாற்றி வந்துள்ளார்.
இவர் கடைசியாக கடந்த வருடம் டிசம்பர் மாதம் இந்தியாவிற்கு சென்று மீண்டும் அமெரிக்கா சென்றுள்ளார்.
இந்தநிலையில், குறித்த மாணவன் அங்குள்ள விற்பனை நிலையமொன்றில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயம் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள், தெலுங்கானாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவன் கொல்லப்பட்டதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், அந்நாட்டு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 4 மாதங்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த 2 மாணவர்கள் அமெரிக்காவில் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள இச்சம்பவம் அந்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
