Main Menu

பெல்ஜியத்தின் இளவரசியை சந்தித்தார் மோடி

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று பெல்ஜியத்தின் இளவரசி ஆஸ்ட்ரிட்டை சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பின் போது வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் விவசாயம் ஆகியவற்றில் புதிய கூட்டாண்மைகள் மூலம் இரு நாடுகளும் தங்கள் மக்களுக்கு வரம்பற்ற வாய்ப்புகளை வழங்கும் என நம்பிக்கை தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களுக்கு பங்களிப்பு செய்வதற்காக பெல்ஜியத்தின் இளவரசி இந்தியாவிற்கு வருகை தந்தள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்தோடு “பெல்ஜியத்தின் இளவரசியை சந்தித்ததில் மகிழ்ச்சி எனவும், இந்தியாவிற்கு 300 உறுப்பினர்களைக் கொண்ட பொருளாதாரப் பணியை வழிநடத்தும் அவரது முயற்சியை மிகவும் பாராட்டுவதாகவும், இந்தியப் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...
0Shares