Main Menu

இன்று உலக வனவிலங்கு தினம்

இன்று (03) உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 68 ஆவது அமர்வின் போது அறிவிக்கப்பட்டபடி, மார்ச் 3 ஆம் திகதி உலக வனவிலங்கு தினம் கொண்டாடப்படுகிறது.
அழிந்து வரும் உயிரினங்களுக்கான வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுத்தல், நிலையான வளர்ச்சியை ஊக்குவித்தல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
உலக வனவிலங்கு தினத்தையொட்டி உலகெங்கிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...