இனவாதம் , தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப் படாது ஜனாதிபதி
இனவாதம் அல்லது தீவிரவாதம் தலைதூக்க ஒருபோதும் இடமளிக்கப்படாது என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தற்போதுள்ள சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், புதிய சட்ட கட்டமைப்பின் ஊடாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஜனாதிபதி, இதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
