ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள இலங்கை தமிழரசு கட்சி
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் எவ்வாறு நிர்வாகத்தை ஏற்படுத்துவது என்பது தொடர்பில் இலங்கை தமிழரசு கட்சி ஏனைய கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் இந்த பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...