பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு 109 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதற்கு ஆதரவாக 155 வாக்குகளும், எதிராக 46 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
வாக்கெடுப்பின் போது ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி என்பன இதன்போது எதிராக வாக்களித்தன.
இதேவேளை, ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இதன்போது ஆதரவாக வாக்களித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 17 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட பாதீட்டின் மீதான இரண்டாம் வாசிப்பு தொடர்பான விவாதம் கடந்த 18 ஆம் திகதி ஆரம்பமானது.
குறித்த விவாதத்தின் இறுதி நாளான வாக்கெடுப்பு இடம்பெற்றது. இந்தநிலையில், பாதீடு தொடர்பான குழுநிலை விவாதம் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ளது.
