ஐ.நா சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழு – சஜித் இடையே கலந்துரையாடல்
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகள் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிட பிரதிநிதி Marc Andre Franche மற்றும் சமாதானம் மற்றும் அபிவிருத்திக்கான ஆலோசகர் Patrick Mc Carthy ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
நாட்டின் பல்வேறு சமூக, பொருளாதார மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்த சந்திப்பின்போது இருதரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அதேநேரம், இந்த சந்திப்பின்போது தற்போதைய வங்குரோத்து நிலையிலிருந்து நாட்டை மீட்டெடுக்கத் தேவையான ஆதரவை வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைப் பிரதிநிதிகளிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரிக்கை விடுத்துள்ளார்.
