Main Menu

நிரந்தர போர் நிறுத்தத்திற்கான நேரம் இது – அன்டோனியோ குட்டரெஸ்

நிரந்தர போர் நிறுத்தத்திற்கான நேரம் இதுவென ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 58 ஆவது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தார்.

மனித குலத்தின் ஒக்சிஜன் மனித உரிமைகள் என அன்டோனியோ குட்டரெஸ் சுட்டிக்காட்டினார்.

காசா போர்,யுக்ரேன் போர்,சூடானின் உள்நாட்டுப் போர் குறித்து தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

காசாவில் மக்கள் பாரிய சிரமத்தை எதிர்நோக்கியுள்ளதாக அன்டோனியோ குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவை உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகக் கூறினார்.

பகிரவும்...